லண்டன்: சிவந்த முகத்தை உடைய ஆண்களையே அதிகம் பெண்கள் விரும்புவதாக
சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் அவர்களுக்கு
வசீகரத்தன்மையோடு ஆளுமைத்திறன் அதிகம் இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இது
குறித்து பிரிட்டனின், நாட்டிங்காம் பல்கலையைச் சேர்ந்த
ஆராய்ச்சியாளர்கள், ஆண்களின் சில புகைப்படங்களை பெண்களிடம் கொடுத்து,
அவற்றை தங்கள் விருப்பத்திற்கேற்ப, கணினியில் அழகு படுத்தும்படி கூறி,
ஆராய்ச்சி நடத்தினர்.
அதில் பெரும்பாலான பெண்கள், ஆண்களின்
முகங்களுக்கு மிதமான சிவப்பு நிறத்தைக் கொடுத்து மெருகூட்டியிருந்தனர்.
மிதமான சிவப்பு நிறமுடைய ஆண்களின் முகமே, பெண்களின் விருப்பமாக உள்ளது.
இளஞ்சிவப்பு நிற முகம்
ஆனால்,
அதிக சிவப்பு நிறம், ஆண்களின் கரடுமுரடான சுபாவத்தை குறிப்பதாக, பெண்கள்
கருதுகின்றனர். இது குறித்து போர்ட்ஸ்மவுத் பல்கலையைச் சேர்ந்த
ஆராய்ச்சியாளர் மற்றும் உளவியல் வல்லுனரான சமந்தா குறிப்பிடுகையில்,
"சிவப்பு என்பது ஆபத்தின் அடையாளம். பொதுவாக அதிக உடல் உழைப்பு இருக்கும்
போதும், உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும், அதிக மது அருந்தும் தருணங்களிலும்
தான் முகம் மிகவும் சிவந்து காணப்படும். ஆனால், வெளுத்த முகம், நோயையும்
பயந்த சுபாவத்தையும் குறிக்கும். ஆதலால், இரண்டுக்கும் இடைப்பட்ட
இளஞ்சிவப்பு (ரோஸ்) நிற முகமுடைய ஆண்களையே, பெண்கள் அதிகம்
விரும்புகின்றனர்,' என்றார்.
ஆளுமைத்திறன் அதிகம்
பொதுவாக
குரங்குகள், பறவைகள் மற்றும் மீன்கள் போன்ற இனங்களில் சிவப்பு நிற ஆண்
இனத்திற்குத்தான் ஆளுமைத்திறன் அதிகம். இவ்வகையான ஆண் இனங்களால்தான் பெண்
இனங்களை அதிக அளவில் ஈர்க்க முடியும் என்று கருதப்படுகிறது.
ஆனால்
மனித இனங்களிலும், சிவப்பு நிற முகமே ஆளுமையை உணர்த்துவதோடு பெண்களால்
அதிகம் விரும்பப்படுகிறது என்று இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ஹாலிவுட்
நடிகர் பிராபிட், அமெரிக்கா முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ஆகியோரை
உதாரணமாக கூறியுள்ளனர். எனவேதான் பெரும்பாலான பெண்கள் ரோஸ்நிற ஆண்களையே
விரும்புகின்றனர் என்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் மூலம்
நிரூபித்துள்ளனர்.
அப்படீன்னா, நம்மூர் கருப்பசாமிகளையெல்லாம் யார் விரும்புவாங்களோ தெரியலையே..
Comments