பாதாம் சருமத்தில் ஏற்படும் வறட்சி, அதிக எண்ணெய் பசை மற்றும் சரும
சுருக்கம் போன்றவற்றை நீக்க பெரிதும் உதவுகின்றன. முக்கியமாக சருமத்திற்கு
ஃபேஸ் பேக் போடும் முன், கிளின்சரை வைத்து முகத்தை கழுவ வேண்டும். அதிலும்
எண்ணெய் பசை சருமத்திற்கு ஜெல் கிளின்சரும், வறட்சியான சருமத்திற்கு பால்
அல்லது லோசனும் சிறந்தது. கிளின்சரை சருமத்திற்கு பயன்படுத்தியதும்,
சருமத்தின் துளைகள் சற்று விரிவடைய ஒரு சிறிய ஸ்கரப் செய்ய வேண்டும்.
இதனால் ஃபேஸ் பேக் போடுவதன் பலன் நன்கு தெரியும். மேலும் எந்த சருமத்திற்கு
பாதாமை வைத்து எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்று பார்ப்போமா!!!
அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற பாதாம் ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
பாதாம்- 5
பால் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 4 துளிகள்
பால் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 4 துளிகள்
பயன்படுத்தும் முறை:
பாதாம்
இரவில் படுக்கும் முன் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் காலையில்
எழுந்து, அதன் தோலை நீக்கி, பாலோடு சேர்த்து அரைத்து, மற்ற பொருட்களையும்
அதனுடன் கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் மெதுவாக
மசாஜ் போல் செய்து, பிறகு கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு மூன்று முறை
செய்து வந்தால், சருமம் நன்கு மென்மையாக, சுத்தமாக, அழகோடு பளிச்சென்று
மின்னும்.
வறண்ட சருமத்திற்கு...
இரவில் ஊற
வைத்த பாதாமை காலையில் தோலை நீக்கி அரைத்து, ரோஸ் வாட்டர் மற்றும்
கிளிசரின் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின்
காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் சுத்தமான துணி அல்லது காட்டனை வைத்து
துடைக்க வேண்டும்.
சுருக்கமுள்ள சருமத்திற்கு...
பாதாமை
தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து
பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பேஸ்ட் செய்த பின், 1 டீஸ்பூன் தேன்
மற்றும் 1 முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலந்து கொள்ளவும். பின் அந்த
கலவையை முகத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு ஈரமான துணியால்
துடைத்து எடுக்கவும். இதனால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.
அதிலும்
பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இது உடலுக்கு, சருமத்திற்கு
மட்டுமின்றி கூந்தலுக்கும் சிறந்தது. ஆகவே பாதாமை தினமும் சாப்பிடுவதோடு,
அதன் எண்ணெயை கூந்தலுக்கு தடவி, சருமத்திற்கு அவ்வப்போது ஃபேஸ் மாஸ்க்
போட்டு அழகாக ஜொலியுங்கள்...
Comments