சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.127 உயர்வு.. இப்போது விலை 881.50!!

 Price Non Subsidised Lpg Cylinder Hiked By 127 சென்னை: மானியம் இல்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 127 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து 14.2 கிலோ கொண்ட ஒரு சிலிண்டரின் விலை ரூ. 881.50 ஆக உயர்ந்துள்ளது.
வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் கொண்ட சமையஸ் கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை சமீபத்தில் மத்திய அரசு வருடத்துக்கு 6 ஆக குறைத்தது.
இதனால் ஒரு வருடத்தில் நாம் வாங்கும் 14.2 கிலோ எடை கொண்ட முதல் 6 சிலிண்டர்கள் விலை ரூ. 399 ஆகவும், 7வது சிலிண்டர்
முதல் விலை ரூ. 754.50 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் சர்வதேச கச்சா எண்ணெய், எரிவாயு விலைக்கு ஏற்ப சிலிண்டர்களின் விலையை (மானியம் இல்லாதவை) உயர்த்த மத்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இப்போது சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்ந்துள்ளதையடுத்து சிலிண்டரின் விலையை ரூ. 127 உயர்த்தியுள்ளன. இதனால் ஒரு சிலிண்டரின் விலை இனி ரூ. 881.50 ஆக இருக்கும்.
சர்வதேச விலையைப் பொறுத்து பெட்ரோல் மாதிரியே அவ்வப்போது இனி கேஸ் சிலிண்டரின் விலையும் கூடும் குறையும். அதே நேரத்தில் மானியத்துடன் தரப்படும் முதல் 6 கேஸ் சிலிண்டர்களின் விலை ரூ. 399 ஆகவே இருக்கும்.

Comments