எங்களால்தான் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்க முடியும்: பாரதிய ஜனதா கட்சி

 Separate Telangana Possible Only With Bjp Javadekar ஹைதராபாத்: பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் மட்டுமெ தனித் தெலுங்கானா மாநிலம் உருவாகும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறியுள்ளார்.

தெலுங்கானா பகுதிகளில் நடைபெற உள்ள பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவது, 2 எம்.பி.க்களை மட்டுமே கொண்டுள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற சிறிய கட்சியாலோ, காங்கிரஸ் கட்சியாலோ சாத்தியம் அல்ல. பாரதிய ஜனதாவால் மட்டுமே தனித்தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க முடியும்.

மூன்று மாநிலங்களை உருவாக்குவதாக நாங்கள் வாக்குறுதி அளித்தோம். அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் நாங்கள் மூன்று மாநிலங்களை உருவாக்கினோம். இப்போது தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதாக நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம். அதை நிறைவேற்றுவோம்.

நாங்கள் காங்கிரஸ் கட்சியைப் போல் அல்ல. அவர்கள் ஒரு வாக்குறுதி கொடுப்பார்கள். பின்னர் அதற்கு நேர் எதிராக நடந்து கொள்வார்கள்.

Comments