கூட்டணி குறித்து பொங்கலுக்குப் பின் முடிவு : ராமதாஸ்

காஞ்சிபுரம் : "தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து, ஜனவரி 14ம் தேதிக்குப் பிறகு தான் எதையும் உறுதியாகக் கூற முடியும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் பா.ம.க., சார்பில் நடந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாமில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் அரசியல் கூட்டணி குறித்து கேட்டபோது, "ஜனவரி 14 மற்றும் 15ம் தேதிக்குப் பின்னர் தான் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை குறித்து எதுவும் உறுதியாகக் கூற முடியும்' என்றார். "கம்யூனிஸ்ட்கள் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை' எனக் கூறுகின்றனரே எனக் கேட்டபோது, "அகில இந்திய அளவில் அரசியல் செய்யும் அவர்களுக்கு எல்லாம் தெரியும்' என்றார்.

Comments