குவாங்சு: ஆசிய விளையாட்டு போட்டி இன்று நிறைவு பெறுகிறது. இதற்காக மிகப் பிரம்மாண்டமான நிறைவு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள குவாங்சு நகரில், 16வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 12ம் தேதி துவங்கியது. இப்போட்டி இன்று நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று, மாரத்தான், பெண்கள் வாலிபால் உட்பட பல போட்டிகளில் மொத்தம் ஐந்து தங்கங்கள் வழங்கப்படுகிறது. மாலையில் துவக்க விழாவைப் போல, நிறைவு விழாவும் மிகவும் புதுமையான முறையில் நடக்க உள்ளது.
"ஜெய் ஹோ' உற்சாகம்:
துவக்க விழாவின் போது ஹெனிக்சியா தீவுப் பகுதியில் 30 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கும் வகையில் பிரத்யேக அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இதே இடத்தில் இரண்டு மணி நேர கலை நிகழ்ச்சிகளுடன். நிறைவு விழாவும் நடக்கிறது. இதில், "ஆஸ்கர் நாயகன்' ஏ.ஆர்.ரஹ்மானின் "ஜெய் ஹோ' பாடல் ஒலிக்க உள்ளது. இதனை இந்தியாவை சேர்ந்த ரவி திரிபாதி என்ற இளம் பாடகர் பாட உள்ளார். தவிர, ஆசிய பாப் பாடகர் மற்றும் நடிகர் ஜங் ஜி-ஹுன், மூன்று பாடல்கள் பாடுகின்றார்.
எட்டு பாடல்கள்:
இதுகுறித்து நிறைவு விழாவின் இசை அமைப்பாளர் பையான் லியூனியான் கூறுகையில்,"" நிறைவு விழாவில் மொத்தம் எட்டு பாடல்கள் இடம்பெறும். இம்முறை சீன பாடல்களுடன் சேர்ந்து, ஆசியாவின் பெருமையை குறிக்கும் வகையில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இருந்து பாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.
பாய் மரப்படகு:
கலை நிகழ்ச்சியில் பெரிய திரை உதவியுடன் பாய்மரப்படகு போன்ற தோற்றத்தை உருவாக்கப் போகின்றனர். இதுகுறித்து நிறைவு விழாவின் தலைமை இயக்குனர் ஹான் ஹுவதா கூறுகையில்,"" மிகப்பெரிய திரையின் உதவியுடன் பாய்மரப்படகு போன்ற தோற்றத்தை உருவாக்கு உள்ளோம். மொத்தத்தில் இந்த விழாவை மக்கள் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்க வகையில் சிறப்பாக வழங்குவோம்,'' என்றார்.
பிரமாண்ட நிகழ்ச்சி:
விழாவின் தலைமை வடிவமைப்பாளர் மியா பெய்ரு கூறுகையில்,"" கலை நிகழ்ச்சிகள் துவக்கவிழாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வகையில் இருக்கும். 1,500 இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி தரையிலும், ஆகாயத்திலும் நடக்கவுள்ளது. இதில் பங்கு பெறுபவர்கள், பாடல்கள் பாடுவது மட்டுமன்றி, பல திறமைகளையும் வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்,'' என்றார்.

Comments