சென்னை: நடிகர் தனுஷ், ஜெனிலியா இணைந்து நடித்த 'உத்தம புத்திரன்' தீபாவளி அன்று வெளியானது. படத்தில் நடிகர் விவேக், கவுண்டர் சமூகத்தினர் குறித்து பேசிய வசனத்தால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதனையடுத்து தங்களது சமூகத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதாக கவுண்டர் சமுதாயத்தினர் கொதிப்படைந்துள்ளனர். இதுதொடர்பாக இன்று பேட்டி அளித்த தனுஷ் தங்களை அறியாமல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்றுவிட்டதாக கூறினார். மேலும் படத்திலிருந்து அந்த சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படும் என தனுஷ் கூறினார். போராட்டத்தைக் கைவிட்டு, படத்தை திரையரங்குகளில் ஒட ரசிகர்களும், கொங்கு சமூகத்தினரும் ஒத்துழைக்க வேண்டும் என தனுஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments