புதுடில்லி : அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல்., மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்தியா தயாராகி வரும் நிலையில் அந்த போட்டிகளை ஒளிப்பரப்பும் உரிமத்தை பெற்று அதன் மூலம் அதிகளவிலான விளம்பரங்களை பெற செட் மேக்ஸ் மற்றும் இஎஸ்பிஎன் ஆகிய இரண்டு தொலைக்காட்சி சேனல்களுக்கும் இடையே கடுமையான போட்டி துவங்கி உள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதால் விளம்பர வாய்ப்புக்கள் அதிகளவில் குவியும், அதுமட்டுமின்றி ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐ.பி.எல்., டிவென்டி-20 போட்டியில் இந்த ஆண்டு 10 அணிகள் பங்கேற்பதால் விளம்பரதாரர்கள் அதிகளவில் குவியும் என்பதால் இந்த போட்டி கடுமையாக உள்ளது. இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல்., போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை செட் மேக்ஸ் சேனல் மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் உலகக் கோப்பை போட்டிகளை இ.எஸ்.பி.என்., நிறுவனம் மட்டுமே ஒளிபரப்பி வந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இரு நிறுவனங்களும் 50 சதவீதம் விளம்பரதாரர்களை பெற்றுள்ள நிலையில் அதிக உரிமம் பெற போட்டி வலுத்து வருகிறது.
தொழில்துறை கணக்கீட்டின் படி செட் மேக்ஸ் நிறுவனம் ஐ.பி.எல்., போட்டிகளின் 2ம் பகுதியை ஒளிபரப்ப ரூ.5 லட்சமும், இ.எஸ்.பி.என்., நிறுவனம் ரூ.3.5 லட்சமும் முன்பதிவு செய்துள்ளன. பிப்ரவரி 19ம் தேதி துவங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகளை ஒளிபரப்புவதன் மூலம் இ.எஸ்.பி.என்., நிறுவனத்திற்கு ரூ.700 கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் மற்ற சில நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த செட் மேக்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உலகக்கோப்பை போட்டிகளை ஒளிபரப்ப இ.எஸ்.பி.என்., நிறுவனத்திற்கு விளம்பரதாரராக இருக்க இதுவரை சோனி, நோக்கியா, பெப்சி, மாருதி சுசுகி மற்றும் பிலிப்ஸ் ஆகிய நிறுவனங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதே போன்று ஐ.பி.எல்., போட்டிகளுக்கு வோடோஃபோன், வீடியோகான், சாம்சங், கோத்ரேஜ், எல்.ஜி., ஹூண்டாய், பெப்சி, டாடா ஃபோட்டான், கேட்பரி உள்ளிட்ட நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.

Comments