ரம்லத்துக்கு கொலை மிரட்டல்!!

பிரபுதேவா மனைவி ரம்லத்துக்கு மர்ம நபர்களால் கொலை மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா - பிரபு தேவா கள்ளக் காதலை எதிர்த்தும், கணவனை தன்னோடு சேர்த்து வைக்கக் கோரியும் மனைவி ரம்லத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபு தேவாவின் சொத்துக்களை விற்க தடையும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு வரும் நவம்பர் 23-ம் தேதி மீண்டும் விசாரணை க்கு வருகிறது. ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்மன் அனுப்பப்பட்டும், அதில் பிரபுதேவாவும் நயன்தாராவும் ஆஜராகவில்லை.

எனவே அவர்களுக்கு இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 23-ம் தேதி இருவரும் ஆஜராவார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இருவரும் வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கு தொடர்ந்துள்ள ரம்லத்துக்கும் அவரது வழக்கறிஞருக்கும் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கடிதம் எங்கிருந்து, யாரால் அனுப்பப்பட்டது என்று தெரியவில்லை. எனவே இந்தக் கடிதத்தை சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரம்லத்தின் வழக்கறிஞர் ஒப்படைத்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comments