ஐ.நா. கவுன்சிலில் இந்தியா பதறுகிறது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பார்லிமென்ட்டில் உரையாற்றியபோது, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெற அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும் என்றார். இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சரவை ஆலோசனை நடத்தி கண்டனம் தெரிவித்தது.

"ஐ.நா. விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களை பின்பற்றுவதில் இந்தியாவிடம் பல வேறுபாடுகள் உள்ளன. அதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் அளிக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருப்பது பாகிஸ்தானுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், கவலையையும் அளித்துள்ளது" என பாகிஸ்தான் அமைச்சரவை வெளியிட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Comments