விழுப்புரம் : கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட மேல்மருவத்தூர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் பிரசன்னா, விழுப்புரம் அருகே மீட்கப்பட்டார். ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த மாணவர் பிரசன்னா, மேல்மருவத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், இன்று கடத்தல் கும்பல் ஒன்று பிரசன்னாவை காரில் கடத்திச் சென்றது. தகவலறிந்த போலீசார் பிரசன்னாவின் மொபைல் போன் மூலம் அவர் விழுப்புரம் அருகே இருப்பதைக் கண்டறிந்தனர். இந்நிலையில், இன்று மாலை, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜானகிபுரம் பஸ்ஸ்டாபில் பிரசன்னாவை இறக்கி விட்ட கும்பல் தப்பிச்சென்றுள்ளது.
Comments