ராசாவுக்கு பதில் யார் அமைச்சர்?: எனக்குத் தெரியாது- கனிமொழி

டெல்லி: அடுத்த தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் யார் என்பதை கட்சித் தலைமை தீர்மானிக்கும் என்று முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக எம்பியுமான கனிமொழி கூறினார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் ராசா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நீங்கள்தான் புதிய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரா என்று கனிமொழியிடம் நிருபர்கள் கேட்டதற்கு,

அது குறித்து எனக்குத் தெரியாது. அடுத்த தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் யார் என்பதை கட்சித் தலைமை தீர்மானிக்கும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் ராசா எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் குற்றமற்றவர்.

ஆனால், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால் நாடாளுமன்றம் சுமூகமாகச் செயல்பட வேண்டும் என்று திமுக விரும்பியது. அதனால் தான் ராசா பதவி விலகினார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக பதவி விலகவில்லை என்றார்.

Comments