குவாங்சு: ஆசிய விளையாட்டில், ஆண்களுக்கான ஸ்னூக்கர், குழு பிரிவு போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. டென்னிஸ் போட்டியில் சோம்தேவ் தேவ்வர்மன் தலைமையிலான இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
சீனாவின் குவாங்சு நகரில், 16வது ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. நேற்று நடந்த ஆண்களுக்கான ஸ்னூக்கர், குழு பிரிவு அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா சார்பில் யாசின் மெர்சன்ட், ஸ்நெக் ஆதித்ய மேத்தா, பிரிஜேஸ் டாமணி பங்கேற்றனர். இதில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 3-0 என பாகிஸ்தானை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது.
பின்னர் நடந்த பைனலில் இந்திய அணி, சீனாவை சந்தித்தது. இதன் முதல் "பிரேமில்' சீனாவின் டிங் 70-16 என இந்தியாவின் யாசின் மெர்சன்டை வீழ்த்தினார். பின்னர் எழுச்சி கண்ட இந்திய வீரர் ஸ்நெக் ஆதித்ய மேத்தா, 2வது "பிரேமில்' 51-46 என சீனாவின் வென்போ லியாங்கை வீழ்த்தினார். அடுத்து நடந்த 3வது "பிரேமில்' சீனாவின் டிங்-டியான் ஜோடி 68-27 என இந்தியாவின் மெர்சன்ட்-மேத்தா ஜோடியை வீழ்த்தியது. பின்னர் நடந்த 4வது "பிரேமில்' இந்தியாவின் யாசின் மெர்சன்ட் 0-96 என சீனாவின் வென்போ லியாங்கிடம் தோல்வியடைந்தார். இதன்மூலம் இந்தியா 1-3 (16-70, 51-46, 27-68, 0-90) என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெள்ளிப் பதக்கம் வென்றது.
சோம்தேவ் குழு வெண்கலம்:
டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில், சோம்தேவ் தேவ்வர்மன் தலைமையிலான இந்திய ஆண்கள் குழு, சீன தைபே அணியை எதிர்கொண்டது. முதல் போட்டியில் சனம் சிங் 7-6, 2-6, 6-7 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் டிசங் யங்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அடுத்த போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் 6-2, 7-6 என்ற நேர் செட்டில் சீன தைபேயின் டி செனை வீழ்த்தினார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது. பின்னர் நடந்த இரட்டையரில் இந்தியாவின் சோம்தேவ்-சனம் சிங் ஜோடி 4-6, 6-7 என்ற நேர் செட்டில் சீன தைபேயின் டிசங் யங்-சு ஹுயன் யி ஜோடியிடம் தோல்வியடைந்தது. இறுதியில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் போட்டி விதிப்படி அரையிறுதியில் தோல்வியடைந்த அணிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படும். இதன்மூலம் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது.
ஹாக்கி அபாரம்:
ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியை, இந்திய வீரர்கள் வெற்றியுடன் துவக்கியுள்ளனர். நேற்று நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. போட்டி துவங்கியது முதல் இந்திய வீரர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் இந்தியாவின் பரத் சிகாரா முதல் கோல் அடித்தார். பின்னர் 4வது மற்றும் 18வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பை சந்தீப் சிங் கோலாக மாற்றினார். தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு, 22வது நிமிடத்தில் சர்வன்ஜித் சிங் "பீல்டு' கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் இந்தியா 4-0 என முன்னிலை வகித்திருந்தது.
இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 37வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பை துஷார் கந்தகர் கோலாக மாற்றினார். பின்னர் 38வது மற்றும் 48வது நிமிடத்தில் முறையே அர்ஜுன் ஹலப்பா, ஷிவேந்திரா சிங் தலா ஒரு கோல் அடித்தனர். இதற்கு ஹாங்காங் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நாளை நடக்கும் 2வது லீக் போட்டியில் இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
துப்பாக்கி சுடுதல் ஏமாற்றம்:
முதலிரண்டு நாளில் பதக்கம் வென்று அசத்திய இந்திய துப்பாக்கி சுடுதல் நட்சத்திரங்கள், நேற்று நடந்த போட்டிகளில் ஒரு பதக்கம் கூட கைப்பற்றாமல் ஏமாற்றினர். ஆண்களுக்கான 50 மீ., "ரைபிள் புரோன்' தனிநபர் தகுதிச்சுற்றில் பங்கேற்ற இந்தியாவின் ஹரியோம் சிங் (13வது இடம்), ககன் நரங் (24வது), சுரேந்திரா சிங் ரத்தோடு (27வது) பைனலுக்கு முன்னேறாமல் ஏமாற்றினர். ஆண்களுக்கான 50 மீ., "ரைபிள் புரோன்' குழு பிரிவு பைனலில் ஹரியோம் சிங், ககன் நரங், சுரேந்திரா சிங் ரத்தோடு உள்ளிட்ட இந்திய அணி, 5வது இடம் பிடித்தது.
பின்னர் நடந்த 25மீ., "ரேபிட் பயர் பிஸ்டல்' தகுதிச்சுற்றில் ராகுல் (11வது இடம்), விஜய் குமார் (12வது), குர்பிரீத் சிங் (17வது) உள்ளிட்ட இந்திய வீரர்கள் பைனலுக்கு தகுதிபெறவில்லை. இதேபிரிவில் நடந்த குழு போட்டியில், ராகுல், விஜய் குமார், குர்பிரீத் சிங் உள்ளிட்ட இந்திய அணி, 4வது இடம் பிடித்து ஏமாற்றியது.
அடுத்து நடந்த 50 மீ., "ரைபிள் புரோன்' தனிநபர் போட்டியில் தேஜாஸ்வினி சவந்த் (11வது இடம்), மீனா (14வது), லஜ்ஜாகுமாரி (17வது) உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள் ஏமாற்றினர். இதேபிரிவில் நடந்த குழு போட்டியில், தேஜாஸ்வினி, மீனா, லஜ்ஜாகுமாரி உள்ளிட்ட இந்திய அணி 5வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது.
நழுவிய பதக்கம்:
ஆண்களுக்கான 50 மீ., பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் விதர்வால் காடே, தகுதிச்சுற்றில் 3வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். ஆனால் விறுவிறுப்பான பைனலில் 0.3 வினாடி பின்தங்கியதால் விதர்வால் காடே (22.87), வெண்கலப் பதக்கத்தை கோட்டைவிட்டு, 4வது இடம் பிடித்தார். ஜப்பானின் ஹராதா (22.84) 3வது இடம் பிடித்தார். நீச்சல் போட்டியில் மற்ற இந்திய வீரர்கள் யாரும் பைனலுக்கு முன்னேறவில்லை.
மற்ற போட்டிகள்:
ஆண்களுக்கான 69 கி.கி., பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ரவி குமார் பதக்கம் கைப்பற்ற முடியாமல் ஏமாற்றினார். ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்தியாவின் ஆஷிஸ் குமார், 23வது இடம் பிடித்து ஏமாற்றினார். ஜூடோ போட்டியில் இந்திய வீரர் ராமஷிரே யாதவ், தோல்வியடைந்தார். பீச் வாலிபால், வாட்டர் போலோ உள்ளிட்ட போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தது. ஆண்களுக்கான வாலிபால் லீக் போட்டியில் இந்திய அணி, தென் கொரியா அணியிடம் தோல்வியடைந்தது. கூடைப்பந்து போட்டியின் லீக் சுற்றுக்கு இந்திய அணி தகுதிபெற்றது. நேற்று நடந்த லீக் சுற்றுக்கான தகுதிச்சுற்றில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் "எப்' பிரிவில் இந்திய அணி, கத்தார், ஈரான், ஜப்பான், சீன தைபே, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் இந்திய அணி, கத்தார் அணியுடன் மோதுகிறது.
சசிகரண் அபாரம்:
ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில், இந்திய கிராண்ட்மாஸ்டர் சசிகரண் கிருஷ்ணன் முன்னேறிவருகிறார். நேற்று நடந்த 5வது சுற்றுப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் ரஸ்டமுக்கு எதிராக "டிரா' செய்த சசிகரண், 6வது மற்றும் 7வது சுற்றுப் போட்டியில் முறையே வியட்நாம், பிலிப்பைன்ஸ் வீரர்களை வீழ்த்தினார். இதுவரை நடந்துள்ள 7 சுற்றுப் போட்டிகளின் முடிவில் 4 வெற்றி, 3 "டிரா' உட்பட 5.5 புள்ளிகள் பெற்றுள்ள சசிகரண், 2வது இடத்தை வியட்நாமின் குயங் லியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 5 வெற்றி, 2 தோல்வி உட்பட 5 புள்ளிகள் பெற்றுள்ள மற்றொரு இந்திய வீரர் சூரிய சேகர் கங்குலி, 5வது இடத்தில் உள்ளார். பெண்கள் பிரிவில் ஹரிகா, தானியா சச்தேவ் உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள் தலா 5 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளனர்.
இந்தியா 7வது இடம்
ஆசிய விளையாட்டு போட்டிக்கான பதக்கப்பட்டியலில், 8 பதக்கங்கள் வென்றுள்ள இந்தியா 7வது இடத்தில் உள்ளது. சீனா, 92 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
இவ்வரிசையில் "டாப்-7' நாடுகள்:
நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
சீனா 53 20 19 92
தென் கொரியா 18 13 18 49
ஜப்பான் 13 25 23 61
சீன தைபே 2 3 9 14
ஹாங்காங் 2 3 2 7
வட கொரியா 1 4 9 14
இந்தியா 1 4 3 8
"500'வது பதக்கம்
நேற்று நடந்த ஆண்களுக்கான ஸ்னூக்கர், குழு பிரிவு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியா, ஆசிய விளையாட்டு போட்டி அரங்கில் தனது 500வது பதக்கத்தை பெற்றது. இதுவரை இந்தியா 115 தங்கம், 155 வெள்ளி, 230 வெண்கலம் உட்பட 500 பதக்கம் வென்றுள்ளது. இதன்மூலம் ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் 500 பதக்கம் வென்ற 4வது நாடு என்ற பெருமை பெற்றது. முதல் மூன்று இடங்களில் சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

Comments