மும்பை: தேசிய கீதத்தினை அவமதித்ததாக மகாராஷ்டிரா முதல்வர் பிருத்திவ்சவான் மீது பரபரப்பு புகார் எழுந்து்ள்ளது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதல் சம்பவத்தினர் 2-ம் ஆண்டு நினைவு தினம் மும்பை கேட் ஆப் இந்தியாவில் அணுஷ்டிக்கப்பட்டது. இதில் சர்வ கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மகாராஷ்டிர மாநில முதல்வர் பிருத்திவ்ராஜ் சவானும் கலந்து கொண்டார். முன்னதாக தேசிய கீதம் பாடலம் ஒலிக்கப்பட்டது. அப்போது தேசிய கீதம் பாடல் முடியும் வரை எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். ஆனால் பிருத்திவ்ராஜ் சவான் பாடல் ஒலித்துக்கொண்டிருந்த போதே அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது தேசிய கீதத்தினை அவமதிக்கும் செயல் என பா.ஜ.க. - சிவசேனா கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பா.ஜ.மாநில தலைவர் சுதீர்முஹந்திவார் கூறுகையில், சவான் பொது மன்னிப்புகேட்க வேண்டும். தேசிய கீதத்தினை அவமதித்தது குறித்து தனியார் தொலைக்காட்சி படம் பிடித்தது ஆதாரமாக உள்ளது. என்றார். இவருடன் தெற்கு மும்பை எம்.பி. மிலின்ட் தியோராவும் அவமதித்துள்ளார்.
Comments