மேட்டூர்: தொடர் நீர்வத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மாலை 116 அடியாக உயர்ந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்து, நீர்வரத்து அதிகரித்ததால் அக்டோபர் 29 ம் தேதி 60 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நவம்பர் 12ம் தேதி 100 அடியாகவும், நவம்பர் 20ம் தேதி 110 அடியாகவும், இன்று 116 அடியாகவும் உயர்ந்தது. நீர் இருப்பு 87.141 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. கடந்த 28 நாளில் அணை நீர்மட்டம் 56 அடியும், நீர் இருப்பு 62 டி.எம்.சி.,யும் அதிகரித்துள்ளது. விநாடிக்கு 19 ஆயிரத்து 435 கனஅடி நீர்வந்தது. அணை நிரம்ப இன்னமும் 6.5 டி.எம்.சி., நீர் தேவை. நீர்வரத்தில் இதே நிலை நீடித்தால் ஐந்து நாளில் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும்.
Comments