தாணிப்பாறை அருவியில் வெள்ளம்: ஏழு பேர் மீட்பு

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை அருவியில் சிக்கிய ஏழு பேர் மீட்கப்பட்டனர்.ஸ்ரீவி., மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம், மயில்வாகனன், குருநாதன் உட்பட, ஏழு பேர்,   மாலை 4 மணியளவில் சதுரகிரி மலையடிவாரமான தாணிப்பாறை அருவிக்கு குளிக்க சென்றனர். அப்போது, கனமழை பெய்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஏழு பேர் சிக்கி, வெளி வரமுடியாமல் தவித்தனர். மொபைல்போன் மூலம், "101'க்கு(அவசர உதவி) தகவல் தெரிவித்தனர்.வத்திராயிருப்பு தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்தனர். அதற்குள் மலையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த பக்தர்கள், அப்பகுதி விவசாயிகள் அருவியில் சிக்கிய ஏழு பேரின் சைகையை பார்த்தனர். உடனே தங்களது துணிகளை கயிறுபோல் கட்டி ஒவ்வொருவராக அருவியிலிருந்து மீட்டனர்.

Comments