பசும்பொன்: குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர் நிருபர்களிடம் பேசுகையில்; அரசியல் கட்சி சார்பில் இங்கு நான்தான் முதன்முதலாக மரியாதை செலுத்தினேன். அதன்பிறகுதான் பல அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது என கேட்டதற்கு பதில் அளித்த ஜெ., திருப்திகரமாக உள்ளது என்றார். மதியம் 1.45 மணியளவில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் : கடந்த 35 ஆண்டுகளாக தேவர் குரு பூஜைக்கு வந்து தான் அஞ்சலி செலுத்துவதாக கூறினார். இலங்கையில் போர் முடிந்துவிடவில்லை, தமிழீழத்துக்கான போர் மீண்டும் நடைபெறும். தமிழீழம் அமையும் என்றார்.
Comments