சென்னை : அ.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து வளர்மதி நீக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்டங்களின் அ.தி.மு.க. பொறுப்பாளராக இருந்து வரும் பா.வளர்மதி இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டங்களின் பொறுப்பாளராக இருந்து வரும் பாலகங்கா எம்.பி. இன்று முதல் விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்டங்களையும் சேர்த்து கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
Comments