ஜவுளிக்கடை அதிபர்வீட்டை உடைத்துநகை கொள்ளை

மன்னார்குடி: மன்னார்குடி மூன்றாம் தெருவில் உள்ள ஜவுளிக்கடை அதிபர் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை மற்றும் 18 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

மன்னார்குடி மூன்றாம் தெருவில் வசிப்பவர் ரவிவர்மா (42). இவர் கடைவீதியில் ரெடிமேட் ஜவுளி கடையை நடத்தி வருகிறார். தீபாவளி முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு ஜவுளிகளை அடுக்கி வைப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு கடைக்குச் சென்றார்.துணிகளை அடுக்கி வைத்துவிட்டு மீண்டும் நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டுக்கு சென்றபோது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் 18 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருப்பதை அறிந்த ரவிவர்மா மன்னார்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்சிங் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Comments