மதுரை : ""தேர்தல் நெருங்கும் காரணத்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நாடகமாடுகிறார்,'' என, மதுரையில் துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மதுரையில் நடந்த ஆர்ப்பாட்ட கூட்டம் திருப்புமுனை ஏற்படுத்தும் என ஜெ., பேசியுள்ளாரே? என்ற கேள்விக்கு ஸ்டாலின் கூறியதாவது:இது பொய், பித்தாலட்டம், நாடகம். தேர்தல் நெருங்கும் காரணத்தால் மக்களை ஏமாற்றும் நாடகத்தில் ஜெ., தொடர்ந்து ஈடுபடுகிறார். இதை நாங்கள் மட்டுமில்லாமல், மக்களும் நன்றாக கவனித்து கொண்டுள்ளனர். அவரது பொய் பிரசார நாடகங்களுக்கு, மக்கள் நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பர்.
உதாரணமாக சமீபத்தில் முதல்வர் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடந்ததாகவும், டெண்டர் விடுவதில் தி.மு.க.,வினருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவர் ஜெ., கூறியது வேட்ககேடு. அடுத்த நாளே, நான் விளக்கம் கேட்டேன். தி.மு.க.,வினருக்கு டெண்டர் விட்டதை ஆதாரங்களுடன் நிரூபித்தால், அமைச்சர் என்ற முறையில் பொறுப்பு ஏற்பதாக தெரிவித்தேன். இதுவரை பதில் இல்லை.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Comments