சென்னை : ""வரும் 1ம்தேதியிலிருந்து கட்சி தொடர்பான அனைத்து செயல்பாடுகள் குறித்த விவரங்களையும் எனக்கு தெரிவிக்க வேண்டும்,'' என மாவட்டச்செயலர்களுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.
அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் மற்றும் பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நேற்று மாலை நடந்தது. அக்கூட்டம் ஒரு மணி நேரம் நடந்தது.
கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:மேலவை தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். நவம்பர் 9ம் தேதி வாக்காளர்கள் மனுக்கள் கொடுப்பதற்குரிய கடைசி நாள் என்பதால் மாவட்டச் செயலர்கள் அந்தந்த மாவட்டங்களில் விடுப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கும் பணியை நிறைவேற்ற வேண்டும். சட்டசபை தேர்தலில் பணியாற்றக் கூடிய பூத் கமிட்டி பட்டியல்களையும் இன்னும் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். கடந்த 3 மாதங்களாக இளைஞர் பாசறையிலிருந்து பூத் கமிட்டி பட்டியல் கேட்டிருந்தேன். அந்த பட்டியலும் சில மாவட்டங்களில் இருந்து இன்னும் வரவில்லை.அ.தி.மு.க., கூட்டணியில் சேருவதற்கு முக்கிய கட்சிகள் தயாராகவுள்ளது.
கூட்டணி குறித்த முடிவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் வெற்றிக்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. மாவட்டத்தில் கோஷ்டி பூசல் இல்லாமல் கட்சியை வளர்க்க வேண்டும். கட்சியை வளர்ப்பதை விட கோஷ்டி பூசலையே வளர்த்துள்ளீர்கள். கோஷ்டி பூசல் காரணமாக சேகர்பாபுவிடமிருந்து மாவட்டச் செயலர் பதவியை எடுத்தேன். சில மாவட்டச் செயலர்களின் செயல்பாடுகள் அதிருப்தியாக உள்ளது. செயல்பட முடியாமல் இருக்கும் மாவட்டச் செயலர்கள் யார், யார் என்பது எனக்கு தெரியும்.வேலை செய்யாமல் இருக்கும் மாவட்டச் செயலர்கள் தானாகவே முன் வந்து என்னிடம் அவர்களின் பிரச்னைகளை எடுத்துச் சொல்லலாம். மற்றவர்கள் பணியாற்றுவதற்கு வழி விடலாம்.
அப்படி செய்யாமல் இருப்பவர்கள் மீது நானே நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்கட்சி மாவட்டச்செயலராக பணியாற்ற விட்டு, கடைசி நேரத்தில் பதவியிலிருந்து எடுத்து விட்டீர்கள் என நீங்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காக நான் பொறுமையாக இருக்கிறேன்.கட்சி நிர்வாகிகளை எப்படி நியமிக்க வேண்டும் என முதலில் ஒரு திட்டத்தை வைத்திருந்தேன். அந்ததிட்டம் மீதும் குறை சொல்லப்பட்டது. பின் மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமித்தேன்.
ஆனால், அவர்களும் கட்சியை வளர்ப்பதில் அக்கறை காட்டுவதில்லை. இன்னும் ஆறு மாதத்திற்குள் தேர்தல் வரவுள்ளது. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பதவி வழங்கவும், வேண்டப்படாதவர்களை நீக்கவும் பரிந்துரை செய்கின்றனர். உண்மையாக கட்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. சில மாதங்களாக உங்களை நான் கண்காணித்து கொண்டு தான் இருக்கிறேன்.மாவட்டச் செயலர்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களில் செய்து முடிக்கும் கட்சி பணிகள் தொடர்பான தகவலை வரும் 1ம் தேதி முதல் தினமும் எனக்கு தெரிவிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்திக்கலாம். அவரிடம் கூறினேன், இவரிடம் கூறினேன் என்ற பிரச்னை இனிமேல் இருக்கக் கூடாது.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Comments