6-வது முறையும் கருணாநிதியே முதல்வர்! - முக ஸ்டாலின்

பசும்பொன்: தமிழகத்தில் 6வது முறையாக கருணாநிதி தலைமையிலஸ் திமுக ஆட்சி அமையும் என்று கூறினார் துணை முதல்வர் முக ஸ்டாலின் .

பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பலமாக உள்ளது.

இந்தக் கூட்டணிக்கு எதிராக யார் யாரோ என்னென்னமோ செய்து பார்க்கிறார்கள். அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை.

நான் உறுதியாகச் சொல்வேன், தமிழகத்தில் 6-வது முறையாக தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும். மீண்டும் கருணாநிதி முதல்வராக ஆட்சியில் அமர்வார்.

கூட்டணியில் புதிய கட்சிகள் வருமா என்பதை இப்போதே கூற முடியாது. நேரமிருக்கிறது. ஆனால் எதிரணியினர் எதிர்பார்க்க முடியாத பலமிக்க கூட்டணியாக அமையப் போகிறது...

திமுக ஆட்சியில்தான் தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பெற்றன. இந்தப் பகுதியில் மேலும் தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. ", என்றார் ஸ்டாலின்.

Comments