போஸ்டன்: உலகில் புகழ்பெற்றவர்கள் யார் யார்,அவர்களின் திறமை போன்றவற்றை அடிப்படையாக வைத்து உலகின் தலைசிறந்த நபராக தேர்ந்தெடுப்பது வெளிநாட்டு பத்திரிகைகளின் வழக்கம். அதுபோல் பார்சூன் பத்திரிகையும் கருத்து கணிப்பை நடத்தியது. அதில் 40 வயதுக்குட்பட்ட இளம் தொழில் அதிபர்களில் ஆர்செலர் குழுமத்தை சேர்ந்த தலைமை நிதித்துறை அதிகாரி ஆதித்யா மிட்டலை தேர்ந்தெடுத்துள்ளது. இவர் தன்னுடைய கம்பெனியை சீனா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் 2020ம் ஆண்டுகளில் முன்னணி நிறுவனமாக்க முயற்சி எடுத்து வருகிறார். என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் மிட்டல் ஒருவர் மட்டுமே இந்தியராக இருந்துள்ளார். ஆனால் தற்போது மற்றொரு இந்தியரான 38 வயதாகும் அமிட் சட்டர்ஜி 37 -வது இடத்தை பெற்றுள்ளார். 39 வயதாகும் நெட்ஸ் கேப் கம்ப்யூட்டர் கம்பெனி நிர்வாகி மார்க் ஆண்டர்சன் தான் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பேஸ் புக்கை உருவாக்கிய 26 வயதுடைய மார்க்ஜூக்கர்பெர்க்கும் டுவிட்டரை உருவாக்கிய ஈவன் வில்லியம்ஸ் 3-வது இடத்திலும் உள்ளனர்.
Comments