காபூல் : ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் அமைந்துள்ள "நேட்டோ' படையினரின் முகாம்களை தாக்கிய தலிபான் பயங்கரவாதிகள் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் தென்பகுதி பக்டிக்கா பகுதியில் "நேட்டோ' படையின் முகாம்கள் உள்ளன. இவற்றின் மீது ராக்கெட் மூலம் ஏவப்படும் கையெறி குண்டுகள், சிறிய ஆயுதங்கள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் பல முனைகளில் இருந்தும் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில், நேட்டோ படையைச் சேர்ந்த ஐந்து பேர் காயம் அடைந்தனர்.தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது, நேட்டோ படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் 30 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியது தாங்களே என, தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Comments