புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் போதுமான முன்னேற்றம் ஏற்படாததற்கு சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதமரிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆனால் இது நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்று கூறினார். மேலும் மும்பையில் கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்த முழு விபரங்கள் எதுவும் தமக்கு தெரியாததால் அது குறித்து கருத்து தெரிவிப்பது அர்த்தமுள்ளதாக அமையாது என்று கூறியுள்ளார்.
Comments