ஜகார்டா : இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி காணாமல் போன 298 பேரில் 135 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. சுனாமியில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 298 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நார்த் பகாய் தீவுகளில் 100க்கும் மேற்பட்டோர் தப்பித்து தஞ்சம் புகுந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் இவர்கள் அனைவரையும் மீட்டனர். எஞ்சியுள்ள 163 பேரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
Comments