பாட்னா: '' அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரின் கடமை,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
பாட்னாவில் நடந்த மாநாட்டில் ராகுல் பேசியதாவது: காங்கிரசும், இந்திய மக்களும் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கி உள்ளனர். அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரின் கடமை.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது, நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தான் சுதந்திரம் கிடைத்தது என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். இதன் மூலம் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என மோகன் பகவத் வெளிப்படையாக கூறுகிறார். பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்.,ம் அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்துகின்றன.
பா.ஜ., கூட்டணி அரசு, பீஹார் மாநிலத்தை தொழிலாளர் தொழிற்சாலையாக உருவாக்கி உள்ளனர். மக்கள் கடினமாக உழைத்து, சம்பாதித்து ஜிஎஸ்டி செலுத்துகின்றனர். ஆனால், பிரதமர் மோடி, அந்த பணத்தை 20-25 கோடீஸ்வரர்களுக்கு கொடுக்கிறார்.இவ்வாறு ராகுல் பேசினார்.
போலி
முன்னதாக அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் ராகுல் பேசியதாவது: நாட்டின் உண்மையான சூழ்நிலையை தெரிந்து கொள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பீஹாரில் நடத்தப்பட்டது போல் போலியான கணக்கெடுப்பு நடத்தக்கூடாது. இதற்காக தனியாக கொள்கை வகுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான சட்டத்தை பார்லிமென்டில் காங்கிரஸ் கொண்டு வரும். இட ஒதுக்கீட்டிற்கான 50 சதவீதம் என்ற உச்சவரம்பை அகற்றுவோம். இவ்வாறு ராகுல் பேசினார்.
Comments