கொரோனா : அன்று ஜெ.அன்பழகன் மறைவிற்கு ஸ்டாலின் மீது வீண் பழி : இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனிச் செயலாளர் தாமோதரன் பலி

நேற்று, சென்னையில் மட்டும் 919 பாதிக்கப்பட்டனர். வரும் 19ம் தேதி முதல், 12 நாட்களுக்கு சென்னை மற்றும் அண்டையிலுள்ள 3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன். 2 நாள் முன்பாகத்தான் அவர் சிகிச்சைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. சளி உள்ளிட்ட அறிகுறிகள் அவருக்கு தென்பட்டதாம்.
இந்த நிலையில், தாமோதரன், இன்று காலை, உயிரிழந்துள்ளார். எனவே அலுவலகத்தில், தனிச்செயலாளர் உடன் இருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, முதல்வரின் புகைப்படக் கலைஞருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்திலுள்ள பத்திரிக்கையாளர்கள் அறை பூட்டப்பட்டுள்ளது.
அன்று ஜெ.அன்பழகன் மறைவிற்கு ஸ்டாலின் மீது வீண் பழி போட்டு மலிவாங்க அரசியல் செய்த அதிமுக மற்றும் பா.ஜ.க.விற்கு காலம் இன்று தக்க பதிலை கொடுத்திருக்கிறது. வினை விதைத்தவன்...
அன்று ஜெ.அன்பழகன் மறைவிற்கு ஸ்டாலின் மீது வீண் பழி போட்டு மலிவாங்க அரசியல் செய்த அதிமுக மற்றும் பா.ஜ.க.விற்கு காலம் இன்று தக்க பதிலை கொடுத்திருக்கிறது. வினை விதைத்தவன்...
Comments