
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழனி. அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா உள்ளது உறுதியானது. இதனையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பழனி நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ. அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
எம்.எல்.ஏ., குணமடைய ஸ்டாலின் வாழ்த்து
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
#CoronaVirus தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருபெரும்புதூர் அதிமுக MLA திரு.கே.பழனி அவர்கள் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.— M.K.Stalin (@mkstalin) June 13, 2020
பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!
Comments