ஈசிஆர் ரோட்டில் பாய்ந்து வந்த கார்.. காருக்குள் ரம்யா கிருஷ்ணன்.. டிக்கியை திறந்து பார்த்தால்.. ஷாக்

liquor bottles smuggling in ramya krishnan innova car near chennaiசென்னை: ஈசிஆர் ரோட்டில்.. இரவு நேரத்தில் பறந்து வந்தது ரம்யா கிருஷ்ணன் கார்.. அந்த காரை நிறுத்தி டிக்கியை திறந்து பார்த்த போலீசார் அதிர்ந்து போய்விட்டனர்.
ஊரடங்கு போட்டதில் இருந்தே சென்னையில் டாஸ்மாக்குகள் மூடப்பட்டுள்ளது.. மற்ற மாவட்டங்களில் திறக்க அனுமதி தந்த நிலையில், சென்னையில் மட்டும் கெடுபிடிகள் உள்ளன.

ஆனால் சென்னையில் மது விற்பனை தடை செய்யப்பட்டுவிட்டதால், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை சிலர் கடத்தி வருகின்றனர். அவர்களை தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி நம் போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

இரவு பகலாக இதே வேலையாக வாகன சோதனை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்படித்தான் ஈசிஆர் ரோட்டில் கானத்துார் போலீசார் முட்டுக்காடு அருகில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர்.. அப்போது மகாபலிபுரத்தில் இருந்து ஒரு இன்னோவா கார்.. TN 07 CQ 0099 என்ற பதிவெண் கொண்டது.. அந்த காரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.

அப்போதுதான் அந்த கார் ரம்யா கிருஷ்ணனுடையது என்பது தெரியவந்தது. காருக்குள் டிரைவர் செல்வகுமாரும், ரம்யா கிருஷ்ணனும், அவரது சகோதரி வினயா கிருஷ்ணனும் உட்கார்ந்திருந்தனர். அவர்களிடம் போலீசார் காரின் டிக்கியை திறக்க வேண்டும் என்று போலீசார் சொன்னார்கள்.. அதன்படியே டிக்கியும் திறக்கப்பட்டது.. அதில், சோதனை நடத்தியதில், 97 டின்களில் அடைக்கப்பட்ட பீர் மற்றும் 8 பிராந்தி பாட்டில்களும் இருந்தன.

இதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் செல்வகுமாரையும் கைது செய்தனர்.. பிறகு கானத்தூர் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்து, அடுத்த சில மணி நேரத்தில் ஜாமீனிலும் விடுவித்தனர்.

ரம்யா கிருஷ்ணன் காரில் இவ்வளவு மதுபாட்டில்கள் எப்படி வந்தது? பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி டிரைவர் கடத்தி வந்துள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்யா கிருஷ்ணன் காரில் பாட்டில் பாட்டிலாக மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments