சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. 9 நாளில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு

oil price today: Petrol price hiked by 48 paise/litre, diesel by 23 paise சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4.87 உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனையால் நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது. வரி வருவாய் பாதிக்கப்பட்ட சூழலில் கடந்த மே 6 ஆம் தேதி அன்று மத்திய அரசு மீண்டும் கலால் வரியை பெட்ரோல் லிட்டருக்கு ரூ .10 மற்றும் டீசலுக்கு ரூ .13 ஆக உயர்த்தியது.

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையில் அதன் பிறகு தினசரி மாற்றங்களை அறிவித்து வெளியிட்டன. பெட்ரோல் டீசல் விலை கடந்த ஜூன் 8ம் தேதி முதல் தினமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 48 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 23 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4.87 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 43 பைசா உயர்ந்து 79.96 க்கு விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.47 பைசா உயர்ந்து 83.17 ஆக விற்பனையாகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை இன்று 0.48 பைசா உயர்ந்து 76.26 பைசாவுக்கு விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.46 பைசா உயர்ந்து 78.10க்கு விற்பனையாகிறது.

சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 0.51 பைசா உயர்ந்து 72.69க்கு விற்பனையாகிறது. டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 0.59 பைசா உயர்ந்து 74.62க்கு விற்பனையாகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் டீசல் விலை 0.53 பைசா உயர்ந்து 70.33க்கு விற்பனையாகிறது. மும்பையில் டீசல் விலை லிட்டருக்கு 0.57 பைசா உயர்ந்து 73.21க்கு விற்பனையாகிறது.

Comments