ஊரடங்கை நீக்கினால் அவ்ளோ தான் : ஒரே மாதத்தில் 8 லட்சம் பேருக்கு கொரோனா வந்திரும் : அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து மிக்சிகன் பல்கலைக்கழகம் ஆய்வு செய்துள்ளது. இதன் ஆய்வறிக்கையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமான சூழலில் உள்ளது.
இந்த நேரத்தில் லாக்டவுனை நீக்கினால் இந்தியாவில் ஜூலை 15-ஆம் தேதி 8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவது உறுதி. இந்த நிலை நீடித்தால் பிரேசில், ரஷ்யாவை இந்தியா முந்தி செல்லும் நிலை ஏற்படும். நேர்மறையாக இருக்க விரும்புகிறேன். ஆனால் அடுத்த 2 மாதங்களில் இது மிகவும் கடினமாக இருக்கும்.
மிக நீண்ட கால கணிப்புகள் அவர்களது வெப்சைட்களில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (ஹெர்டு இம்யூனிட்டி) அதிகரிக்கும் வரை நாடு முழுவதும் தொற்றுநோய் பரவ வரும் போது இந்தியாவிலும் உச்சத்தை தொடும் என்பதை எதிர்பார்க்கலாம் என அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது.
வைரஸ் கன்டெய்ன்மென்ட் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட கேரளா, மும்பையின் தாராவி ஆகிய இடங்களில் கான்டாக்ட் டிரேசிங் மற்றும் தனிமைப்படுத்துதல் மூலம் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால் இந்த நடைமுறைகளை இந்தியா முழுவதும் அமல்படுத்துவது சற்று கடினம் ஆகும்.
Comments