
தமிழகம் உள்பட கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களின் வாகன பயன்பாடு குறைந்தே காணப்பட்டது. இந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் போக்குவரத்து இயக்கமும் அதிகரித்தது. கடந்த மே மாதம் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்த நிலையில் 34 நாட்களுக்கு பின்னர் கடந்த 7-ஆம் தேதி முதல் உயர்ந்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று 8ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 54 காசுகள் விலை உயர்ந்து ரூ 79.53-க்கும் டீசல் விலையும் 54 காசுகள் விலை உயர்ந்து ரூ 72.18-க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து சராசரியாக 60 காசுகள் என்ற அடிப்படையில் உயர்த்தப்பட்ட இந்த விலையுயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Comments