உலகம் முழுக்க கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 77.25 லட்சத்தை தாண்டியது

Worldwide, the number of people affected by coronavirus rises to 77.25 million வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77.25 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க 428,210 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 39 லட்சத்தைக் கடந்துள்ளதாக கூறுகிறது புள்ளி விவரங்கள். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்கிறது தகவல்கள்.

கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக, 2,116,922 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில் 829,902, ரஷ்யா 511,423, இந்தியா 309,603, பிரிட்டன் 292,950 என்ற அளவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

Comments