3 லட்சத்தை கடந்தது மொத்த பாதிப்பு.. ஒரே நாளில் 11,400 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட இந்தியா

3,08,993 total coronavirus cases, highest single day spike of 11,458 cases in India டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 11,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய உச்சம் தொட்டுள்ளது, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. ஆம்.. மொத்த எண்ணிக்கை 308,993 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் முதலமைச்சர்களுடன் மற்றொரு சுற்று வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனை நடத்துகிறார்.

ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், தமிழகம், குஜராத் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசிப்பார். கடந்த 24 மணி நேரத்தில் 386 இறப்புகள் நாட்டில் நிகழ்ந்துள்ளதாக சுகாதரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டில் 145779 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. 154330 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அல்லது வெளியேற்றப்பட்டனர், அல்லது இடம்பெயர்ந்தனர். இதுவரை இந்தியாவில், 8884 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், பிரிட்டனை முந்தியது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

Comments