
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் மிக மோசமாக அதிகரித்து வருகிறது.
கடந்த ஒருவார காலமாக இந்தியாவில் நாள்தோறும் குறைந்தது 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா மரணங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
உலக அளவில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை 15 நாடுகள் பெருமளவு தளர்த்தியுள்ளன. இதில் இந்தியாவும் ஒன்று. இதன்விளைவாக கொரோனா பாதிப்பு இன்னமும் மோசமாக இருக்கும் என்கிறது ஜப்பானின் ஆய்வு மையமான நொமுரா. கொரோனா பாதிப்பு 45 நாடுகளை பாதிப்புகளின் அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரித்திருக்கிறது நொமுரா.
இதில் டேஞ்சர் ஜோன் பகுதியில்தான் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மிகமோசமான கொரோனா 2-வது அலை தாக்க வாய்ப்புள்ளாதாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சிங்கப்பூர், ஸ்வீடன், இந்தோனேசியா, மெக்சிகோ, கனடா, செளதி அரேபியா, கொலம்பியா, பிரேசில், அர்ஜெண்டினா, பெரு, தென்னாப்பிரிக்கா, சிலி மற்றும் ஈகுவடார் நாடுகள் உள்ளன.
2-வது கொரோனா அலை தாக்குதலுக்கு வாய்ப்பில்லாத நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியா, ஜப்பான், இத்தாலி, இஸ்ரேல், ஸ்பெயின், சுவிஸ், தென்கொரியா, பிரான்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. 2-வது அலை தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
Comments