
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 1138 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 24547 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 18,782 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 7,10,599 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 22 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 435 பேர் கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31896 ஆக உயர்ந்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டி 178 பேருக்கும், திருவள்ளூரில் 81 பேருக்கும், திருவண்ணாமலையில் 31 பேருக்கும், திருநெல்வேலியில் 19 பேருக்கும், விழுப்புரத்தில் 15 பேருக்கும், மதுரையில் 16 பெருக்கும், ராமநாதபுரத்தில் 23 பேருக்கும், சேலத்தில் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கையில் 14 பேருக்கும், தென்காசியில் 16 பேருக்கும், தேனியில் 8 பேருக்கும், திருச்சி மற்றும் வேலூரில் தலா 9 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Comments