ஒரே நாளில் 1.4 லட்சம் கேஸ்.. உலகம் முழுக்க கோர தாண்டவம் ஆடும் கொரோனா.. ரஷ்யாவை நெருங்கும் இந்தியா

டெல்லி: உலக அளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவிலு
ம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க தற்போது கொரோனா காரணமாக 8,251,213 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தமாக உலகம் முழுக்க 445,188 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் இதுவரை மொத்தமாக 4,299,845 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றுதான் உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தொட்டது. அதேபோல் பலி எண்ணிக்கை இன்று 45 ஆயிரத்தை தாண்டும் என்று கருதப்படுகிறது. உலகம் முழுக்க நேற்று 142568 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

அமெரிக்காவில் மொத்தம் 2,208,389 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 25439 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறையவே இல்லை. கடந்த சில வாரங்களாக குறைந்த எண்ணிக்கை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. தினசரி எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் அதிகமாக வர தொடங்கி உள்ளது. அங்கு மொத்தம் 119132 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் மிக மோசமான நிலையில் இருக்கிறது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை நெருங்கி வருகிறது. அங்கு இதுவரை 928834 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் இன்னொரு பக்கம் அங்கு பலி எண்ணிக்கை 45456 என்ற நிலையில் உள்ளது. நேற்று மட்டும் அங்கு 35464 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று பிரேசிலில்தான் உலகிலேயே அதிகமாக ஒரே நாளில் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதற்கு முன் எந்த நாட்டிலும் ஒரே நாளில் இவ்வளவு கேஸ்கள் பதிவானது இல்லை. ரஷ்யாவில் மொத்தம் 545458 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 8248 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ரஷ்யாவை விரைவில் முந்தும் நிலையில் இந்தியா உள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 11135 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தமாக 354161 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 11921 பேர் இந்தியாவில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இந்தியாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

Comments