11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கு: "சபாநாயகர் இன்னும் முடிவு எடுக்காதது ஏன்?" - உச்ச நீதிமன்றம் கேள்வி

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி தாக்கல் செய்த மனு, இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு, காணொலி வாயிலாக, விசாரணை நடத்தியது. அப்போது, ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு விவகாரத்தில் சபாநாயகர் இன்னும் முடிவு எடுக்காதது ஏன்? என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சபாநாயகர் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். மேலும் இந்த மனு மீதான விசாரணையை, 15 நாட்களுக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments