சென்னையில் 10வது நாளாக பெட்ரோல் டீசல் விலை சரசரவென உயர்வு.. 80 ரூபாயை தாண்டியது பெட்ரோல்!

 Petrol and diesel price hiked in Chennai today சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா முடக்கத்தால் 12 வாரங்கள் பெட்ரோல் டீசல் விலை தினசரி மாற்றப்படமால் இருந்து. ஆனால் அண்மையில் வழக்கம் போல் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் 10 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை கடந்த ஜூன் 8ம் தேதி முதல் தினமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று காலை 6 மணி முதல், பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 பைசா மற்றும் டீசல் லிட்டருக்கு 48 பைசா அதிகரித்துள்ளது.

கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.5.47ம், டீசல் விலை ரூம் 5.80ம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் 16ம் தேதி நிலவரப்படி பெட்ரோல் விலை 41 பைசா உயர்ந்து 80.37க்கு விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.45 பைசா உயர்ந்து 83.62 ஆக விற்பனையாகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை இன்று 0.47 பைசா உயர்ந்து 76.73 பைசாவுக்கு விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.45 பைசா உயர்ந்து 78.55 க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 0.48 பைசா உயர்ந்து 73.17க்கு விற்பனையாகிறது. டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 0.57 பைசா உயர்ந்து 75.19க்கு விற்பனையாகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் டீசல் விலை 0.51 பைசா உயர்ந்து 70.84க்கு விற்பனையாகிறது. மும்பையில் டீசல் விலை லிட்டருக்கு 0.54 பைசா உயர்ந்து 73.75க்கு விற்பனையாகிறது.

Comments