தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை

TN Gets summer rain சென்னை: தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.

தமிழகத்தில் கோடை வெப்பம் அனலை கக்கி வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி இந்த வேகாத வெயிலிலும் ஊரை சுற்றுகிறார்கள்.

இவர்களுக்கு பல இடங்களில் போலீசார் சரியான பாடத்தை கற்பித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய கோடைமழை பரவலாக பெய்து வருகிறது.

திருவாரூர் மற்றும் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இதேபோல் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. திருப்பத்தூர், தேனி, போடி பகுதிகளிலும் மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனால் பல இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை காணப்பட்டது.

Comments