கொடுத்து வைத்தவர்கள் கொளத்தூர் மக்கள் : மாஸ்க், தினசரி உணவு, நிதி உதவி கொளத்தூரில் களமிறங்கிய ஸ்டாலின்

இன்று தன்னுடைய கொளத்தூர் தொகுதிக்கு சென்று அவர் மக்களை சந்தித்தார். அங்கு சமூக விலகல் எப்படி கடைபிடிக்கப்படுகிறது என்று ஆய்வு செய்தார். காய்கறி கடைகள், அத்தியாவசிய பொருட்கள் உள்ள கடைகளுக்கு சென்று அன்றாட பொருட்களின் விலை என்ன என்று மக்களிடம் கேட்டு அறிந்தார். தினசரி கூலி வேலை பார்க்கும் மக்களிடம் சென்று, அவர்களின் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கிறது, எவ்வளவு பாதிப்பு அடைந்துள்ளது என்று விசாரித்தார்.
தனது தொகுதியில் முடங்கி இருக்கும் வெளி மாநில ஊழியர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் கொடுத்து உதவினார். அவர்களுக்கு போர்வைகள், பழங்கள், காய்கறிகள் கொடுத்தார். தங்க இடம் இல்லாதவர்களுக்கு தங்க இடம் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். அதேபோல் வீடு இல்லாமல் சாலையில் தங்கி இருக்கும் மக்களுக்கும், குடிசைகளில் இருக்கும் மக்களுக்கும் உணவு மற்றும் போர்வைகளை வழங்கினார்.
இந்த முடக்கம் காரணமாக சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் சென்னையில் தனது தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லோருக்கும் 500 ரூபாய் நிதி உதவியை இன்று ஸ்டாலின் வழங்கினார். மேலும் அவர்களுக்கு தினசரி தேவைகளுக்கான காய்கறி தேவைகளை வழங்கினார். அவர்களின் அன்றாட பிரச்சனை குறித்து கேட்டறிந்தார்.

அதோடு சென்னையில் தனது தொகுதியில் இருக்கும் போலீசாரையும் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அவர்களுக்கு பல பைகளில் மாஸ்குகளை வழங்கினார். நீங்கள்தான் அதிகமாக வெளியே உள்ளீர்கள். ஒரே மாஸ்க்கை நீண்ட நேரம் பயன்படுத்த கூடாது. அதனால் இதை வைத்துக் கொள்ளுங்கள்.உதவி தேவைப்பட்டால் தகவல் தெரிவியுங்கள் என்று கூறினார். அவர்களுக்கு கை கழுவும் கிருமி நாசினிகளை வழங்கினார்.
தனது தொகுதியில் பல மக்களுக்கு கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களையும், நிதி உதவிகளையும், தேவையான உணவுப் பொருட்களையும், காய்கறிகளையும் ஸ்டாலின் வழங்கினார். ஒருவரை ஒருவர் தொடாமல், சமுக விலகலை கடைபிடித்து ஸ்டாலின் இந்த உணவு பொருட்களை வழங்கினார். ஸ்டாலினின் உதவியை அவரின் தொகுதி மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
Comments