
இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 7 பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். 9,22,860 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளனர். சோதனையில் கொரோனா இல்லை என்றாலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 28 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்.
தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் 1248 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. RT PCR முறையின் படி ஆஎன்ஏவை சோதனை செய்து வருகிறோம். அந்த சோதனை முடிவுகள் வர குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஆகிறது.
சில நேரங்களில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்ற முடிவுக்கு வர முடியாத நிலைக் கூட அந்த சோதனை மூலம் இருக்கிறது. மருத்துவ உபகரணங்களை அதிகமாக வாங்கி வருகிறோம். இன்று காலை உயிரிழந்தவர் நேற்று வரை நன்றாக இருந்தார், இரவு நேரத்தில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இன்று காலை உயிரிழந்தார்.
மகாராஷ்டிரத்தைவிட அதிக அளவில் பாதிப்பு இருந்தாலும் அவர்களை விட தமிழகத்தில்தான் அதிகம் பேருக்கு சோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் ஸ்டேஜ் 2-வில்தான் இருக்கிறது. சமூக பரவல் என்ற நிலைக்குச் செல்லவில்லை. அந்த நிலைக்கு செல்லாமல் இருக்கத்தான் அரசாங்கம் போராடி வருகிறது என்றார் அவர்.
Comments