இந்தியாவில் கொரோனாவுக்கு 79 பேர் பலி - சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்

Total 3374 confirmed cases in India, death toll 79 டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நோய்க்கு இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்; இதனையடுத்து பலி எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நோய்க்கு இன்று ஒரே நாளில் 472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு மொத்தம் 3,374 பேர் பாதிப்படைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 267 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் மொத்தம் 274 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறு லாவ் அகர்வால் கூறினார்.

Comments