கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு உலக வங்கி தரும் 7600 கோடிக்கும் மெழுகுதிரி, டார்ச் லைட் மக்களுக்கு வாங்கி தர போகிறதா மோடி அரசு?

இப்ப்ப்படி ஒரு அறிவாளி பிரதமரை நாம் பெற்றதற்கு, போன பிறவியில் ஏதோ பெரிய பாவம் பண்ணிருப்போம் போல... என்றே மோடி அவர்களின் ஒவ்வொரு செயலும் நம்மை நினைக்க வைக்கிறது.

உலக முழுவதும் கொரோனா நோய் பரவி வரும் வேளையில், மனிதர்கள் தங்களுக்குள் சுய கட்டுப்பாடுடன் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வலியுறுத்தியும், சட்டம் போட்டு பயமுறுத்தியும் வருகிறது. ஆனால், நமக்கு வாய்த்த பிரதமர் ஊரடங்கு அமுலில் இருக்கும் வேளையில் அனைவரும் வெளியில் வந்து கை தட்டுங்கள் என அழைப்பு விடுத்தார்.

ஊரடங்கின் நோக்கமே சமூக விலகலை கடைபிடிக்கதான் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் அவர் அறிவித்த நாளன்று பெரும்பாலான வடநாட்டு மக்கள் சாலைகளில் கும்பல், கும்பலாக ஒன்று கூடி மற்றும் ஒரு ஹோலி பண்டிகையாகவே கொண்டாடினர். தாங்கள் கை தட்டியதாலும், சாப்பாடு தட்டை போட்டு உடைத்ததாலும் அந்த கொடூர கொரோனா ஒழிந்து போனது என ஆர்ப்பரித்து கொண்டாடினர்.

இந்த அறிவற்ற செயலுக்கு பிறகு தான் இந்தியாவில் கொரோனாவின் பரவல் தீவிரம் ஆனது. அதே போன்றொரு அறிவற்ற, சமூக விலகலை கேள்விக்குறியாக்கும் மற்றும் ஒரு அறிவிப்பை இன்று தனது வீடியோ அறிவிப்பின் மூலியமாக மோடி அவர்கள் இன்று காலை வெளியிட்டு இருக்கிறார்.

அதன்படி, வரும் ஏப்ரல் 5-ம் தேதி, இரவு 9 மணிக்கு இந்திய மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் விளக்குகளை அணைத்து விட்டு, 9 நிமிடங்கள் அகல் விளக்கு அல்லது டார்ச் லைட் அடிக்க வேண்டும் என கூறி இருக்கிறார். இதனால் கொரோனா ஒழிப்பு போராட்டம் தீவிரமடையும், கொரோனா ஒழியும் என அறிவித்திருக்கிறார்.

நாட்டில் எத்தனையோ கோடி மக்கள் ஒருவேளை சோற்றிற்கே திண்டாடிட்டு இருக்கும் இந்த இக்கெட்டான நிலையில், தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பம் பசி பட்டினியால் வாடும் நிலையில் மோடி அவர்களின் இந்த அறிவும்பூர்வ (?) அறிவிப்பு மேலும் அவர்களை வெறுப்படைய செய்திருக்கிறது. ஏழை மக்களின் துயர் துடைக்க ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என்று எண்ணியிருந்த நிலையில் மோடி அவர்களின் இந்த முட்டாள் தனமான அறிவிப்பு அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

மேலும் மோடி அவர்களை மிக கேவலமாக கேலி செய்து சமூக வலைதளங்களில் பதிவுகள் பதியப்பட்டு வருகிறது.

உலக வங்கி கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு 7600 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. இதை மோடி அரசு கொரோனா ஒழிப்பிற்காக செலவு செய்யுமா அல்லது மக்கள் விளக்கு பிடிக்க மெழுகுதிரி, டார்ச் லைட் வாங்கி தருமா என்ற வேதனையான கேள்வி மக்கள் மனதில் தோன்றி இருக்கிறது.

கொரோனா ஒழிப்பிற்காக அல்லும்பகலும் உழைக்கும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு சாதனங்கள், உடைகள் இல்லாத நிலையில் மோடி அவர்கள் இந்த உலக வங்கியின் நிதியை உருப்படியாக அவர்களுக்கு செலவு செய்ய அனேக மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். என்றுமே மக்களை பற்றி சிந்திக்காமல், தான் போக்கிலேயே ஆட்சி செய்யும் மத்திய பா.ஜ.க. அரசு கொரோனா விசயத்தில் தனது விளையாட்டை விளையாடாமல் மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு இந்த நிதியில் முற்றிலும் பயன்படுத்த இந்திய மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Comments