தமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம்: இன்று 74 பேருக்கு பாதிப்பு, மொத்த எண்ணிக்கை 485ஆக உயர்வு.. 3 பேர் பலி

இதுகுறித்து பீலா ராஜேஷ் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா பாதிப்பு உறுதியான 74 பேரில் டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள் 73 பேர் ஆகும். குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் இப்படி வேகமாக கொரோனா பரவுவது குறித்து விசாரிக்க தேசிய தொற்றுநோய் இன்ஸ்டியூட் மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.
விழுப்புரம் மற்றும் தேனியில் இன்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். இதில் தேனியில் உயிரிழந்த பெண்மணியின் கணவர் மற்றும் மகன் இருவரும் டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள். அவர்கள் மூலமாக இந்த பெண்மணிக்கும் நோய் பரவியது. இந்த நோய் எப்படி எப்படி மாறுகிறது என்பதை கணிப்பது கஷ்டம். எனவேதான் வீட்டிலேயே இருங்கள் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
ஏற்கனவே மதுரையில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது உறுதியாகியுள்ளது.
Comments