பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி.. அமெரிக்காவில் அதிர்ச்சி

6 weeks baby died of Coronavirus in America நியூயார்க்: அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 6 வாரங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. ஹார்ட்போர்டு பகுதியைச் சேர்ந்த இந்த குழந்தை கடந்த வாரம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

அதில் குழந்தை எந்தவித செய்கையும் இல்லாமல் இருப்பதாக பெற்றோர் கூறியிருந்தனர். இதையடுத்து அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் குழந்தைக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் அக்குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து கனக்டிகட் மாகாணத்தின் ஆளுநர் நெட் லேமண்ட் கூறுகையில் 6 வார குழந்தை உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. கொரோனாவுக்கு பலியானவர்களில் மிக குறைந்த வயதில் இறந்தவராக இக்குழந்தை கருதப்படுகிறது என்றார். அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் பிறந்து 6 மாதமே ஆன குழந்தை இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் பகுதி கொரோனா வைரஸை பரப்பும் மையமாக விளங்குகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,15,003 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5,102 ஆக உயர்ந்துள்ளது.

Comments