
சிங்கப்பூரிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் ஏற்கனவே 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர்.
இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு எந்த பயணமும் மேற்கொள்ளாத பெண் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்தது. இதனிடையே கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் சிங்கப்பூரில் வரும் 7-ந் தேதி முதல் 1 மாதம் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதம லீ சியென் லூங் இன்று அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அந்த நாட்டு மக்களுக்கு லீ சியென் லூங் உரையாற்றுகையில், லாக்டவுன் காலத்தில் அத்தியாவசிய சேவைகள் இயங்கும்.
ஆனால் பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இது கட்டாயமாக்கப்படும். வீட்டில் இருந்து ஊழியர்கள் பணிபுரிவது சாத்தியம் என்றால் அதையும் கடைபிடிக்கலாம் என அறிவித்திருக்கிறார்.
Comments