இந்தியாவில் கொரோனா தாக்கம் கிடுகிடுவென அதிகரிக்கிறது - 2,586 பேருக்கு பாதிப்பு- 73 பேர் பலி!

Coronavirus: 2567 confirmed cases in India and 72 deaths டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நோயின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 2586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்று நோய் மொத்தம் 73 பேரை பலி கொண்டிருக்கிறது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் 21 பேரை பலி கொண்டிருக்கிறது கொரோனா. மொத்தம் 423 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் 309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனாவுக்கு தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து டெல்லியில் 3-வது இடமாக அதிக பாதிப்பு உள்ளது. டெல்லியில் 293 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 4 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் 286 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் 154 பேர் பாதிக்கப்ப்ட்டுள்ளனர். தெலுங்கானாவிலும் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் 161 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 128 பேரும் கர்நாடகாவில் 124 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் 107 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் மரணமடைந்துள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ள குஜராத் மாநிலத்தில் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் 6 பேரும் ஜம்மு காஷ்மீரில் 2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 70 பேரும் மேற்கு வங்கத்தில் 53 பேரும் ஹரியானாவில் 49 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 5 பேரை பலி கொண்ட பஞ்சாப்பில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பீகாரில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இமாச்சல பிரதேசத்திலும் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Comments