
தற்போதைய நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் 215,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 26400 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டதால் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் மார்ச் 31ம் தேதி ஒரே நாளில் 912 பேர் இறந்ததால் உயிரிழப்பு 4051 ஆக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 1049 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை அமெரிக்காவில் 5102 ஆக உயர்ந்துள்ளது.
நியூயார்க் மாகாணம் கொரோனா வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது. அங்கு இதுவரை 83901 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக நியூஜெர்சி மாகாணத்தில் 22255 பேரும், கலிபோர்னியாவில் 9892 பேரும், மிச்சிகன் மாகாணத்தில் 9334 பேரும், ப்ளோரிடாவில் 7738 பேரும், மசாசூசெட்ஸ் மாகாணத்தில் 7738 பேரும், அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் மாகாணத்தில் 5894 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 2ம் தேதியான இன்று காலை மட்டும் அமெரிக்காவில் தற்போது வரை 297 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 8 பேர் புதிதாக இறந்துள்ளனர். அமெரிக்காவில் உச்சகட்ட கொடுமையாக 6 வாரக்குழந்தை கொரோனாவுக்கு பலியாகி உள்ளது. மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகக்கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் எனில் சமூக விலகலை கடைபிடிப்பது, வீட்டிலேயே இருப்பது, கைகளை அடிக்கடி கழுவது, அரசின் அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிப்பது, உடனே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது போன்றவை இறப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். கொரோனா வைரஸின உலகத்தின் ஹாட் ஸ்பாட் ஆக பயங்கரமாக அமெரிக்கா மாறியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
Comments